Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 சுகாதார வைத்திய பிரிவுகளில் டெங்கு நோய் தொற்றுக்குள்ளான 44 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் வாகரை-02, ஓட்டமாவடி-08, வாழைச்சேனை-12, செங்கலடி-16, ஏறாவூர்-29, வவுணதீவு-01, காத்தான்குடி-26, பட்டிப்பளை-01, வெல்லாவெளி-01, கொக்கட்டிச்சோலை-09, ஆரையம்பதி-10, கோரலைப்பற்று மத்தி-16 மற்றும் கிரான்-02 என மொத்தமாக 177 பேர் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த நோய் தொற்று காரணமாக, எவ்வித உயிரிழப்பும் இடம்பெறவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகர சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர் என்று மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.
வெட்டுக்காடு பொது சுகாதாரப் பிரிவு பரிசோதகர் எம். அமுதபாலன் தலைமையில் புதுப்பால வீதி, ரொசைரோ லேன், பாரதி லேன் பிரதேசங்களில் சிரமதானம் மூலம் வீதிகள் நீர் தேங்குமிடங்கள் சீர் செய்யப்பட்டதோடு புகை விசிறலும் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் 2014 ஜனவரி முதல் டிசம்பர் வரை 968 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளதோடு இருவர் உயிரிழந்ததாக கிழக்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். சதுர்முகம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago