2024 நவம்பர் 23, சனிக்கிழமை

‘Janashakthi Full Option Appathon’ தொழில்நுட்ப திறமைக்கான சவால்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்புறுதித் தொழிற்துறையில் புத்தாக்கரீதியாக முன்னிலை வகித்து வருகின்ற ஜனசக்தி இன்ஷ{ரன்ஸ் பீஎல்சி நிறுவனம், தற்காலத்து இளைஞர், யுவதிகளின் புத்தாக்கம்மிக்க சிந்தனைகளை ஈர்க்கும் வகையில் ‘Janashakthi Full Option Appathon’, அடுத்த தலைமுறை தொழில்நுட்ப திறமைக்கான சவால் என்ற பிரச்சார ஊக்குவிப்பை சமீபத்தில் ஆரம்பித்துள்ளது.

அணி ரீதியிலான இச்சவால் மூலமாக தேசத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பொதுமக்களின் வாழ்வில் நற்பயனை விளைவிக்க உதவுகின்ற, மிகச் சிறந்த பயன்பாடுகளை (apps) முன்மொழிந்து, அபிவிருத்தி செய்து, 1 மில்லியன் ரூபா பரீசுத் தொகைக்கு போட்டியிடவுள்ளனர். இச்சவாலுக்கான அங்குரார்ப்பண தொனிப்பொருளாக 'கடுமையான போக்குவரத்து நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கானத் தீர்வுகள்' என்பது அமைந்துள்ளது.

உலகப்புகழ்பெற்ற Google Developer Group இன் வலுவூட்டப்பட்டுள்ள ‘Janashakthi Full Option Appathon’சவால், இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளைத் தமது படைப்பாக்கத்திறன் மற்றும் நடைமுறைரீதியாக சிந்திக்கும் ஆற்றல்களுக்கு சவால் விடுவதை ஊக்குவித்து, பொதுமக்கள் முகங்கொடுக்கின்றப் பிரச்சனைகளுக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதுக்கு தமது திறமைகளைப் பயன்படுத்தி app எனப்படுகின்ற பயன்பாடுகளை அபிவிருத்தி செய்வதை ஊக்குவிப்பு இலக்காகக் கொண்டுள்ளது.

சமர்ப்பிக்கப்படுகின்ற முன்மொழிவுகளின் அடிப்படையில் அணிகள் பல்வேறு கட்டங்களில் போட்டியிட்டு, இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர்களின் மத்தியிலிருந்து குறிப்பிட்ட ஒரு சில அணியினர் தெரிவு செய்யப்படவுள்ளனர். அணிகள் தமது செயற்றிட்டங்களை மிகச் திறமையாக முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டும் வகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களாக உள்ளவர்களின் தலைமையில் பயிற்சிப்பட்டறைகளை ஜனசக்தி நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ளதுடன், இதற்கான ஒட்டுமொத்த நடைமுறையின் போது பங்குபற்றுபவர்களுக்குத் தேவையான வழிகாட்டல் மற்றும் அறிவுரைகளை அவர்கள் வழங்கவுள்ளனர்.

'புத்தாக்கமே எதிர்காலத்துக்கு மார்க்கமாக அமைந்துள்ளதுடன், அதிசிறந்த எதிர்காலதுக்கு வழிகோலுவதில் மகத்தான வளர்ச்சி வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது என ஜனசக்தி நிறுவனம் நம்புகின்றது. ஆகவே இலங்கையிலுள்ள இளம் அறிவாளிகளின் சிந்தனை ஆற்றல்களுக்கு சவால் விடுகின்ற ‘Janashakthi Full Option Appathon’ என்ற போட்டியை நாம் ஆரம்பிப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

இத்தளமேடையானது எமது தேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வலுவூட்ட உதவி, தமது புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப திறமைகளை ஒன்றிணைத்து, வரையறையற்ற வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்ந்து, பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் தீர்வுகளை முன்வைக்க உதவுமென நாம் நம்புகின்றோம்.

‘Janashakthi Full Option Appathon’சவாலானது எமது புத்தாக்கப் பயணத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளதுடன், ஏனையவர்களால் வெறுமனே பிரச்சனைகள் என்று கருதப்படுகின்ற விடயங்களுக்கு தீர்வுகளைக் கண்டறிவதற்கு இளம் சிந்தனைகளுக்கு உந்துசக்தியளித்து, புத்தாக்குனர்களின் புதிய தலைமுறையைச் செதுக்க உதவும் முயற்சியை நாம் முன்னெடுத்து வருகின்றோம்,' என்று ஜனசக்தி இன்ஷ{ன்ஸ் பீஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரீயான ஜுட் பெர்னாண்டோ குறிப்பிட்டார். 'தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியன இணைவதன் மூலமாக புதிய வழிகள் பிறப்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எமக்கு எல்லையற்ற வாய்ப்புக்களை வெளிக்கொணர உதவுகின்ற, மிகச் சிறந்த முன்மொழிவுகள் பலவற்றையும் நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

Flash mob எனப்படுகின்ற புதுமையான தொழில்நுட்பத்தை உபயோகித்து கொழும்பிலுள்ள மஜெஸ்டிக் சிற்றி கட்டடத் தொகுதியில் ‘Janashakthi Full Option Appathon" சவால் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வு அங்கு குழுமியிருந்தோரை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் திளைக்கச் செய்திருந்தது.

அதன் பின்னர் ஜனசக்தி மற்றும்‘Janashakthi Full Option Appathon’ இன் பிரதிநிதிகளை உள்ளடக்கிய முறைசாரா குழுநிலை கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘Janashakthi Full Option Appathon" சவால் தொடர்பான மேலதிக விபரங்களை www.janashakthiappathon.lk மூலமாக அறிந்து கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X