Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஞ்சி, அண்மையில் பதுளையில் இடம்பெற்ற 'மஞ்சியுடன் விளையாட்டுக் கொண்டாட்டம்'Unity Sports Festival) என்ற விளையாட்டு நிகழ்வுக்கு ஆதரவளித்திருந்தது. இந் நிகழ்வானது இந்த மாவட்டத்திலுள்ள சிறுவர்கள், உள்ளூரில் வாழும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஒழுங்குசெய்யப்பட்டது.
இந் நிகழ்வானது ஹாலி- எல த டிலான் பெரேரா அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாள 3000 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 5 நாட்கள் வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில் உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஒருங்கிணைந்து, இந்த போட்டி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தினர்.
யுனிட்டி விளையாட்டு நிகழ்வு, நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் குறித்த ஒரு பிரதேசத்திலுள்ள அனைத்து சமூகங்களையும், இனங்களையும் விளையாட்டின் ஊடாக ஒன்றிணைக்கும் முனைப்புகளின் ஒரு அங்கமாக நடாத்தப்பட்டது.இந்த நிகழ்வில் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுகள், தடகள நிகழ்வுகள், கால்ப்பந்து போட்டிகள் மற்றும் பல்வகை விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன், புதுப்பிக்கப்பட்ட தோழமையுணர்வினை சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோரிடையே வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பட்டறைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அனைத்துப் பங்கேற்பாளர்களும் இலங்கையின் பெரும் நதிகளான களனி, மஹாவலி, வளவ மற்றும் நில்வள கங்கை ஆகிய பெயர்கொண்ட இல்லங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர். இவர்கள் யாவரும் ஒருவருடன் ஒருவர் நெருங்கி பணியாற்றி, அவர்களின் தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்தி, குழுவாக விளையாடி தமது திறமையை வெளிக்காட்டுமாறு கோரப்பட்டிருந்தனர்.
இந் நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சரும், அறக்கட்டளையின் தலைவருமான டிலான் பெரேரா 'இலங்கையின் சிறப்பு வர்த்தக நாமமாக திகழும் மஞ்சி 'மஞ்சியுடன் விளையாட்டுக் கொண்டாட்டம்' நிகழ்வுக்கான அனுசரணையாளராக இணைந்து, குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்த தேசிய முனைப்புக்கு ஆதரவளிப்;பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கின்றது.
'மஞ்சியுடன் விளையாட்டுக் கொண்டாட்டம்' ஆனது பன்முக இன மத வேறுபாட்டினை கொண்டுள்ள குடும்பங்கள் வசிக்கும் பதுளை பிராந்தியத்தில் ஒற்றுமை, இணக்கப்பாடு மற்றும் சகவாழ்வு ஆகியவற்றினை மேம்படுத்தும் நோக்குடன் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 3,000 பாடசாலை மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்வு மிகவெற்றி பெற்றுள்ளமை குறித்து மிகுந்த பெருமிதம் அடைகின்றோம். மஞ்சி நிறுவனம் இந்த நிகழ்வுக்காக அளித்த ஆதரவு மற்றும் முதலீட்டுக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன், நாடு பூராகவும் முன்னெடுக்கக்கூடிய வகையில் ஸ்திரமான நீண்டகால முனைப்பு ஒன்றினை மேம்படுத்தவும் நாம் எண்ணியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு நிகழ்வு குறித்து கருத்துத்தெரிவித்த சிலோன் பிஸ்கட்ஸ் சந்தைப்படுத்தல் குழும பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் 'சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடட் இன் சிறப்புநிலை வர்த்தக நாமமான மஞ்சி, சகல பின்புலங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த சிறுவர்களையும், பெற்றோரையும் விளையாட்டு பந்தய நிகழ்வுகள் ஊடாக இணைப்பதன் ஊடாக மிகுந்த முக்கியத்துவம் பெறும் இந்த விளையாட்டு நிகழ்வுடன் இணைந்து கொள்கின்றமை குறித்து பெருமையடைகின்றது.
இந்த நிகழ்வுடன் எம்மை பங்காளராக இணைய அழைத்த இராஜாங்க அமைச்சருக்கு எமது நன்றிகளை தெரித்துக்கொள்வதுடன், இந்த முனைப்புக்கு எதிர்காலத்திலும் எம்மாலியன்ற ஆதரவை அளிக்க ஆயத்தமாக உள்ளோம். பதுளையில் இந்த வருடம் இடம்பெற்ற நிகழ்வின் வெற்றியினை தொடர்ந்து, இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என நாம் நம்புகின்றோம்.
இந்த நிகழ்ச்சியானது இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் என நம்புகின்றோம். இன்றைய காலகட்டத்தில் சமாதானமும் சகவாழ்வுமிக்க இலங்கையை கட்டமைப்பதுக்கு இவ்வாறான முனைப்புகள் ஊடாக ஒற்றுமையை மேம்படுத்துவது மிக அவசியமாகின்றது' என கூறினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago