2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

வைர ஆடையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை பிரபல பொலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் இவர் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'டாகு மகாராஜ்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடனமாடியிருந்த 'தபிடி திபிடி' பாடல் மிகவும் வைரலானது.

ஊர்வசி தனது 32வது பிறந்தநாளை  செவ்வாய்கிழமை (25) கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது அவர் வைரத்தால் ஆன ஆடையை அணிந்திருந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X