Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
J.A. George / 2023 நவம்பர் 08 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் "'சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வலுவான வழக்கு இது' என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், பாடகி சின்மயி, 'ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன். தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக். சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago