Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழந்து விட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் (வயது 53). இவர், கடந்த 5 ஆம் திகதி தனது மினி கூப்பர் காரில் சென்று கொண்டிருந்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார்.
இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், படுகாயமடைந்த நடிகை அன்னே ஹெச்சின் முதுகு பகுதியில் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். 'அனதர் வேர்ல்ட்' என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர்.
இந்த விபத்து அதிவேகம் காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், பொலிஸார் இதனை உறுதிப்படுத்தவில்லை. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த அன்னே ஹெச் அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என அதிகாரப்பூர்வ முறையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது பெண் செய்தி தொடர்பாளர் ஹாலி பெயர்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, அன்னேவின் அனைத்து மூளை இயக்கமும் நின்று விட்டது. கலிபோர்னியா சட்டப்படி அவர் உயிரிழந்து விட்டார்.
அவரது இதயம் துடித்து கொண்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமளிக்க தயாராகி வருகின்றனர் என தெரிவித்து உள்ளார். அவர் மறைந்து விட்டாலும், அவரது மகன்கள் வழியே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு ஹோமர் லப்பூன் மற்றும் அட்லஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர், வலியில் இருந்து விடுபட்டு நிரந்தர சுதந்திரம் அடைந்து விட்டார் என நம்புகிறேன் என்று ஹோமர் தெரிவித்து உள்ளார். அன்னே ஹெச் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
40 minute ago
42 minute ago
53 minute ago