2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

விஜய் பட தலைப்பில் புது சர்ச்சை

Freelancer   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார், பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ள விஜய்யின் ‘த கோட்’ திரைப்படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’ என, சமூகவலைத்தள பக்கமான எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், ‘The Greatest of all time’ என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘த கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 ‘த கோட்’ திரைப்படம் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விசிக எம்.பி. எழுப்பியுள்ள தலைப்பு தொடர்பான சர்ச்சை அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .