Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஜூன் 04 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் , இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா பார்வையாளர்கள், விமர்சகர்கள், ஊடகங்கள் ஆகியோரிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இன்றும் நாளையும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக இந்த படத்தின் 3 நாள் வசூல் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், கடைசி ஐந்து நிமிட சூர்யாவின் காட்சிகள் இருக்கிறது என்றால் அதில் மிகையில்லை.
ஆரம்பத்திலிருந்தே கோடிட்டுக் காட்டப்பட ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் தான் சூர்யா என்பது கடைசி ஐந்து நிமிடங்களில் தெரிய வந்தபோது, அவரது கேரக்டர் மாஸ் ஆக இருந்தது.
அந்த ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் கேரக்டர் பார்வையாளர்களை மனதால் வென்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். அதுமட்டுமின்றி 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் வில்லன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தில் நடித்தது குறித்து சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது 'என் அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா! எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை! உங்களுடன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு அது தற்போது நிறைவேறிவிட்டது.
இதை நிறைவேற்ற உதவிய இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .