Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2023 ஜனவரி 31 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்த நிலையில் கர்ப்பம் காரணமாக அவர் சீரியலை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு அவருக்கு பதிலாக ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடிக்க ஒப்பந்தமானார். இப்படியான நிலையில் தற்போது ரேஷ்மாவும் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தகவல் பரவியது.
காரணம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீதா ராமன் என்ற சீரியலில் செம்பருத்தி ஆகிலாண்டீஸ்வரி போன்ற ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் என சொல்லப்பட்டது.
மேலும் இனி ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா நடிக்கப் போகிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இப்படியான நிலையில் அது துளி கூட உண்மை இல்லை ராதிகா கதாபாத்திரத்தில் தொடர்ந்து ரேஷ்மா தான் நடிக்கப் போகிறார் என பாக்கியலட்சுமி சீரியல் குழு விளக்கம் அளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .