Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 30 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.
புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார். அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.
இதனைத்தொடர்ந்து, படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கிய படம் விஸ்வரூபம் இரண்டு பாகமும் வெளியாகி மாஸ் காட்டியது. 2018 தான் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.
இதற்கிடையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஆனால் படம் பிரச்சனையால் பாதியில் நிற்கிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
படம் வரும் ஜுன் 3ம் திகதி செம்ம மாஸாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷனில் கமல்ஹாசன் பிஸியாக இருக்க, பட வியாபாரமும் அமோகமாக நடந்து வருகிறது.
அதாவது ரிலீஸ் முன்பே படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துவிட்டதாம். அத்தோடு OTT, சாட்டிலைட் என வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago