2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ரஜினி - ஷாருக்கான் சந்திந்து பேச்சு

J.A. George   / 2022 செப்டெம்பர் 14 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகும் ‘ஜவான்’ திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். 

இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஷாருக்கான் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார். படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இதே ஸ்டுடியோவில் நடிகர் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைபடத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென்று நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பிற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .