Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2022 பெப்ரவரி 08 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் தனுஷும் சூப்பர் ஸ்டார ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இந்நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தனர்.
இருவரையும் சேர்த்து வைக்க இரண்டு குடும்பத்தினருமே தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐஸ்வர்யா மனம் மாறினாலும் தனுஷ் மனம் மாறுவதாக தெரியவில்லை.
ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளார் தனுஷ். தனுஷுக்கு நடிகைகளுடன் இருந்த தொடர்பு, கடன் பிரச்சனை உள்ளிட்டவை பிரிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டை தனது இளைய மகளான சவுந்தர்யாவின் பெயருக்கு எழுதி கொடுத்ததும் தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனைக்கு காரணம் என கூறப்பட்டது.
தனுஷுக்கு போயஸ் கார்டன் வீட்டின் மீது ஒரு கண் இருந்த நிலையில் அந்த வீடு கை விட்டுப்போன விரக்தியில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதை சரிக்கட்டதான் போயஸ் கார்டனில் புது வீடு கட்ட தனுஷை நடிகர் ரஜினிகாந்த் நிர்ப்பந்தித்தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை தொடர்பாக ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யாவுக்கும் சவுந்தர்யாவுக்கும் இடையே போயஸ் கார்டன் வீட்டில் சண்டை நடந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
4 hours ago