Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2022 மார்ச் 07 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல பொலிவூட் நடிகையான ‘சோனாக்ஷி சின்ஹா‘ மீது பண மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ‘தபாங்‘ என்ற திரைப்படத்தின் மூலம் பொலிவூட் திரையுலகிற்கு அறிமுகமானவர் சோனாக்ஷி.
இவர் அதனைத் தொடர்ந்து ‘ரவுடி ரத்தோர், சன் ஆப் சர்தார், புல்லட் ராஜா ‘ ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
மேலும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தார் எனவும், ஆனால் கடைசிநேரத்தில் அந் நிகழ்ச்சியல் பங்கேற்க அவர் வர மறுத்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொடுத்த பணத்தை சோனாக்ஷி சின்ஹா திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் பொலிஸ் நிலையத்தில் குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சோனாக்ஷி சின்ஹா மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மனுதாரர் பிரமோத் சர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத சோனாக்ஷி சின்ஹா, அவரது ஆலோசகர் அபிஷேக் சின்ஹா வுக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கு வரும் ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago