Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2022 மார்ச் 21 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் நடந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை தனுஷ் கண்டு ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவை அழைத்துச் சென்றார். மேலும் மேடைக்கு சென்று இளையராஜாவிடம் அனுமதி கேட்டு தான் எழுதி வைத்த தாலாட்டு பாடலை பாடி அசத்தினார்.
இருப்பினும் அவர் நினைத்து பார்க்காத ஒன்று நடந்துவிட்டது. நிகழ்ச்சியில் வள்ளி திரைப்படத்தில் வந்த என்னுள்ளே என்னுள்ளே பாடல் பாடப்பட்டது. அந்த பாடல் பாடி முடிக்கப்பட்டதும் தனுஷை எழுந்து நிற்குமாறு கூறினார் இளையராஜா. இந்த பாட்டு பிடிச்சிருக்கா, இது நல்லா வர உன் மாமனார் தான் காரணம் என்றார் இளையராஜா.
இதை எதிர்பார்க்காத தனுஷ், பிடித்திருக்கிறது என்பது போன்று தலையை மட்டும் அசைத்துவிட்டு சிரித்தபடியே கைதட்டினார். நிம்மதியை தேடி இசை நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இளையராஜா இப்படி கேட்பார் என்று தனுஷ் எதிர்பார்க்கவில்லை. தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் தான் இளையராஜா கேட்ட கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago