2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

“முதுகெலும்பு இல்லாதவர்கள்;” பிரபல நடிகை விமர்சனம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது” என்று பிரபல நடிகை பத்மபிரியா விமர்சித்துள்ளார்.

கேரள சினிமாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஓய்ந்தபாடில்லை. தினமும் ஒரு புகார், வழக்குப்பதிவு என மலையாள திரையுலகம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பிரபல நடிகர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பெரும் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் முன்னணி நடிகை பத்மபிரியா ஒரு குற்றச்சாட்டை எழுப்பி திரையுலகை மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். மலையாள நடிகர் சங்கத்துக்கு முதுகெலும்பே இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது;, “ஹேமா கமிட்டி அறிக்கை ஏன் 4 ஆண்டுகள் தாமதமாக வெளியிடப்பட்டது என அரசு விளக்கம் அளிக்க வேண்டும். நடிகர்கள் சங்கத்துக்கு முதுகெலும்பே கிடையாது. இராஜினாமா என்பதே பொறுப்பற்ற நடவடிக்கை. எல்லோரும் மொத்தமாக இராஜினாமா என்றால், யாரிடம் அதை ஒப்படைக்கப் போகிறார்கள்? எதுவுமே தெரியாதது போல் பேசும் மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவரின் கருத்துகள் எனக்கு ஏமாற்றத்தையே தருகின்றன.

மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று ஒன்று இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் தான் அவர்கள் நடவடிக்கைகள் இவ்வாறு உள்ளன. நடிகைகளை அவர்கள் ஒரு போதையாகவே பார்க்கின்றனர். எனக்கு இப்போது அதிக படங்கள் கையில் இல்லை, வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும்.

26 வயதில் நான் இருக்கும்போது, 'உங்களுக்கு வயதாகிவிட்டது, நடிப்பதை நிறுத்துங்கள்' என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூறினார். அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியாக எனக்கு இருந்தது” என்று அவர் கூறினார்.

பத்மப்பிரியா தமிழில், சேரன் இயக்கிய, ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ படங்களிலும், 'சத்தம் போடாதே' படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .