2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

முதல் பாராட்டு

Mayu   / 2024 மார்ச் 13 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ்.

அதன் பிறகு அவர் அஜித் நடித்த ’கிரீடம்’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சிம்பு நடித்த ’காளை’ ரஜினிகாந்த் நடித்த ’குசேலன்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்

ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் ஒஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான், ஜி வி பிரகாஷ் இசையமைப்பிற்கு இதுவரை பாராட்டு தெரிவித்தது இல்லை.

இந்த நிலையில், முதல்முறையாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்தின் பின்னணி இசைக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் கடந்த 17 ஆண்டுகளில் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து கிடைத்த முதல் பாராட்டு என்றும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X