Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினி மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் மீண்டும் ஒரே நாளில் வெளியாகவுள்ளமை இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், இதில் அஜித்தோடு சுனில் மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீடும் பின்தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் ஏப்ரல் 14ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில், அதே திகதியில்தான் ரஜினியின் ‘கூலி’ திரைப்படமும் வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரண்டு திரைப்படங்களும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .