2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மரண பயத்தில் இசையமைப்பாளர்

Freelancer   / 2023 ஜூலை 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் தான் இசையமைத்துக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்படத்தை பார்த்து மரண பயம் ஏற்பட்டதாகவும் இரண்டு மாதங்கள் அதன் தாக்கத்தால் தான் தூங்கவே இல்லை என்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்து உள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சந்திரமுகி 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட பணி நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் ’சந்திரமுகி 2’ படத்தை பார்த்து எனக்கு தூக்கமே வரவில்லை. அதில் வரும் கேரக்டர்கள் என்னை மரண பயத்தில் ஆழ்த்தியது. இரண்டு மாதங்களாக இந்த படத்தை பார்த்ததால் எனக்கு தூக்கமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு பின்னர் ’சந்திரமுகி 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரிலும், சந்திரமுகி கேரக்டரில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்த படத்தில் லட்சுமி மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X