Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2023 ஜனவரி 04 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்துவிட்டதாகவும், விஜயின் அடுத்த பார்ட்னர் கீர்த்தி சுரேஷ் என்று விக்கிபீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், விஜயின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன் விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் விக்கிபீடியா பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் 'வாரிசு' பட இசை வெளியீட்டு விழாவிற்கும், ப்ரியா அட்லி வளைகாப்பிற்கும் நடிகர் விஜய் தனியாக கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று விஜயை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
நடிகர் விஜயின் இரண்டு குழந்தைகள் லண்டனில் இருப்பதால், அவர்களைப் பார்க்க சங்கீதா அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள சூட்டிங் பணிகளை முடித்துக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்க்க விரைவில் நடிகர் விஜய் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தொழில் நுட்ப அடிப்படையில் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் மாற்றிவிடலாம். இதனைப் பயன்படுத்தி விஜய் பக்கத்தில் சிலர், பொய்யான தகவல்களைப் பதிவிட்டுள்ளனர் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் விவாகரத்து செய்தி சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் விஜய் விக்கிபீடியா பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் பார்ட்னர் என்ற இடத்தில் இருந்த கீர்த்தி சுரேஷ் பெயர் அகற்றப்பட்டுள்ளதுடன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் என்றும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பதிவிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
50 minute ago
1 hours ago