Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 22 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர் .
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரும்பாலும் பிரபலமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்இ ராஜுஇ பிரியங்காஇ இமான் அண்ணாச்சி உட்பட ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களுக்கு பரிட்சயமான நிலையில் மற்ற அனைத்து போட்டியாளர்களையும் முதல் முறையாக ரசிகர்கள் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த பிக்பாஸ் 5 வது சீசனில் ஒரு சிலர் ஆழ்ந்த நட்புடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது. பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகிய இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது என்பதும் அதன் பின் பாவனியை அமீர் காதலித்ததாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிக்பாஸ் வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதும் சரிஇ பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபோதும் சரி நட்புடன் இருந்தார்கள் என்பதும்இ இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, விளம்பர படங்களில் நடிப்பதுஇ திரைப்படங்களில் நடிப்பது என்று நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் வதந்திகள் எழுந்தது.
இந்த நிலையில் திடீரென அக்சரா தனது சமூக வலைத்தளத்தில் வருணுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அக்சரா மற்றும் வருண் ஜோடி திருமண கோலத்தில் பொருத்தமாக இருப்பதாகவும் உண்மையிலேயே இந்த ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
57 minute ago
3 hours ago