Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 07 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் சேரன் நடித்த ’ஆட்டோகிராஃப்’ திரைப்படம் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வெளியாக உள்ளது.
சேரன், கோபிகா, சினேகா, மல்லிகா உள்பட பலர் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆட்டோகிராஃப்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியதுடன், ஒவ்வொரு பூக்களுமே என்ற பா விஜய் எழுதிய பாடல் தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் ’ஆட்டோகிராஃப்’ வெளியாகி 21 ஆண்டுகளுக்கு பின் தற்போது மே 16ஆம் திகதி மீண்டும் வெளியாக உள்ளதாக சேரன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இயக்குநர் சேரன் ஹீரோக்களின் தேவைக்காய் அலைந்து பின் தன்னையே அதற்காக செதுக்கிக் கொண்ட ஹிட் படம். மீண்டும் ஒரு முறை நம்மை நம் இளமை பருவத்திற்கு கடத்திப் போக மாற்றங்ளை தனக்குத் தானே மெருகேற்றிக் கொண்டு வருகிறது” என தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago