2025 மார்ச் 26, புதன்கிழமை

மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே சில மாஸ் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த நிலையில், இனிமேல் வில்லனாக நடிக்க போவதில்லை என தெரிவித்திருந்தார். 

எனினும், தற்போது முக்கிய நடிகரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "பேட்ட", தளபதி விஜய் நடித்த "மாஸ்டர்", உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். 

அதுபோல், பொலிவுட்டிலும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த "ஜவான்" படத்திலும் வில்லனாக நடித்து கலக்கியிருந்தார். ஆனால் ’மஹாராஜா’ படத்தின் வெற்றிக்கு பின்னர், இனிமேல் அவர் வில்லனாக நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. 

ஆனால், தற்போது நடிகர் பிரபாஸ் நடிக்கும் "ஸ்பிரிட்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி, விஜய் சேதுபதியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X