Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
இவர் பிக்பொஸ் வீட்டை விட்டு வெளியே வந்த காலத்திலிருந்து பல சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்.
குறிப்பாக இயக்குனர் சேரன் மற்றும் நடிகைகளான த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பற்றித் தவறான கருத்துக்களை வெளியிட்டார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப் பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
இந்நிலையில் அண்மையில் ‘தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பற்றி அவதூறாகப் பேசி வீடியோவொன்றையும் வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர் வன்னியரசு அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது சென்னை சைபர் கிரைம் பொலிஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து குறித்த இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இது குறித்து மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
குறிப்பாக அந்த வீடியோவில் “என்னை கைது செய்யவே முடியாது. அது கனவில் தான் நடக்கும். 5 வருடமா இதற்குதான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என பொலிஸாருக்கு சவால் விடும் விதமாகப் பேசியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago