2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பூதமாக மாறிய பிரபுதேவா

J.A. George   / 2021 டிசெம்பர் 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமையுடன் இருக்கும் பிரபுதேவா வித்தியாசமான கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களை தெரிவு செய்து நடிக்கிறார்.

“பொய்க்கால் குதிரை” என்ற திரைப்படத்தில் ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். ஒரு நிஜ கால் மற்றும் ஒரு செயற்கை காலுடன் இருக்கும் பிரபுதேவாவின் தோற்றம் ஏற்கெனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் `மை டியர் பூதம்' என்ற பெயரில் தயாராகும் திரைப்படத்தில் பூதமாக நடிக்கிறார். பிரபுதேவா பூதம் தோற்றத்தில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

திரைப்படத்தை ராகவன் இயக்குகிறார். இதில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பிரபுதேவா நடித்த “பொன் மாணிக்கவேல்” திரைப்படம் அண்மையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத்தயாராக இருந்த “தேள்” திரைப்படம் சில பிரச்சினைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. `யங் மங் சங்', `பஹிரா' மற்றும் பெயரிடப்படாத இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரபுதேவா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .