2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் பட்டியல் வெளியீடு

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த மாதம் 1-ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த புரோமோ விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், போட்டியில் மாகாபா ஆனந்த், நடிகை ரோஷினி, 'குக்கு வித் கோமாளி' புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் இந்த சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளதாக தெரிகிறது.

மேலும், உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன் மற்றும் டிரைவர் ஷர்மிளா உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X