2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாலிவுட்டில் சமந்தா

Editorial   / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா, அடுத்தடுத்து புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். 

இந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகப் போவதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் சமந்தா பாலிவுட்டுக்கு செல்கிறார் என்று கூறப்படுகிறது.

ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் த்ரில்லர் படமாம். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

பாலிவுட் பட வாய்ப்புகள் வருவதால் மும்பையில் பங்களா வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சமந்தா. 

இதேவேளை, சமந்தா தற்போது துபாயில் இருக்கிறார். அங்கிருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு புகைப்படத்தில் சமந்தா வைத்திருந்த ஹேண்ட்பேக்கின் விலை அறிந்து ரசிகர்கள் வியந்தார்கள். அந்த ஹேண்ட்பேக்கின் விலை ரூ. 1 இலட்சத்தி 30,000 ரூபாயாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .