2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டால் நடிகர் இராஜினாமா

Freelancer   / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் வலு பெற்றதை அடுத்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் இராஜினாமா செய்தார்.

மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பெற்ற முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையில் கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் அட்ஜஸ்மெண்ட்க்காக துன்புறுத்தல், அத்துமீறல்கள் நடப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அறிக்கை தொடர்பான விவாதங்கள் ஒருபக்கம் இருக்க, பிரபல நடிகர்கள் ரஞ்சித், சித்திக் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்ப ஆரம்பித்தன.

இதையடுத்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் இராஜினாமா செய்துள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X