Freelancer / 2023 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்ரம் பிரபு நடித்துள்ள 'இறுகப்பற்று' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் இப்படத்தில் இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
'இறுகப்பற்று' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் நாளை புதன்கிழமை 31 மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விக்ரம் பிரபு தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


2 hours ago
3 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
14 Dec 2025