Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 15, செவ்வாய்க்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 12:33 - 0 - 119
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016ல் க்ரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மகதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.
இவர் 2018ல் கீதகோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபல நடிகையானார். தமிழில் சுல்தான் என்ற படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்தார்.
அனிமல் படத்தில் துணிந்து நடித்து இருக்கிறார் அவர். முத்தக்காடசிகள், வசனங்கள், படுக்கை அறைக் காட்சிகள் என பல விதமாக படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து ராஷ்மிகாவின் குடும்பத்தினர் அவரையே குறி வைத்து அவரது குடும்பத்தை அவமதித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளன.
ராஷ்மிகாவின் தங்கை கூட ‘இப்படி ஒரு படத்தில் எப்படி நடித்தாய்?’ என கேள்வி கேட்டதாகவும் ராஷ்மிகாவோ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து எதுவும் பேசாமல் அமைதியாக வெளியே சென்றுவிட்டாதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி பாலிவுட் முழுவதும் வைரலாகி வருகின்றநிலையில் ராஷ்மிகாவின் ரசிகர்களும் நீங்க தப்பு பண்ணிட்டீங்க… பணத்துக்காக இப்படி எல்லாம் நடிச்சிருக்கக்கூடாது. என பதிவுகளையிட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago