Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2021 ஜூலை 09 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய சினிமாவில் நாய்கள் பேசுவது போல் ஒரு திரைப்படம் முதன்முதலாக (தமிழில்) உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பெயர், ‘அன்புள்ள கில்லி.’ இதுபற்றி படத்தின் டைரக்டர் ராமலிங்கம் ஸ்ரீநாத் சொல்கிறார்.
‘‘இது ஒரு ஜாலியான குடும்பக் கதை. குழந்தைகளுடன் கொண்டாடுகிற நகைச்சுவை படம். 5 நாய்களுடன் ஒரு யானையும் நடித்து இருக்கிறது. கில்லி என்ற பெயர் கொண்ட நாயும், தொட்டி ஜெயா என்ற நாயும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றன.
மைத்ரேயா-துசாரா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள்.
‘கில்லி’ பேசுவது போன்ற காட்சிகளுக்கு நகைச்சுவை நடிகர் சூரி குரல் கொடுத்து இருக்கிறார். மைம்கோபி, சாந்தினி, துசாரா, இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். மாலா மணியன் தயாரித்து இருக்கிறார். கொடைக்கானலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்து இருக்கிறோம்.’’
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago