2025 மார்ச் 31, திங்கட்கிழமை

“நான் இசை தெய்வமல்ல; சாதாரண மனிதன்”

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார்.

இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், ஆங்​கிலம் உட்பட பல்​வேறு மொழிகளில் 1,000-க்​கும் மேற்​பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்​ளார். சிம்​பொனி இசை அமைக்க வேண்​டும் என்பது அவரது நீண்​ட​கால கனவாக இருந்​தது. ஒரே நேரத்​தில் பல்​வேறு இசைக்​கருவி​களை ஒன்​றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசை​தான் சிம்​பொனி. அதன் தொடக்​க​மாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்​பத்தை அவர் உரு​வாக்​கி​னார்.

 இந்நிலையில், ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறி​வித்​தார். லண்டனில் மார்ச் 8-ம் திகதி அரங்​கேற்​றம் செய்ய உள்​ள​தாக சில மாதங்களுக்கு முன்பு கூறினார். இந்நிலையில், கடந்த 6-ம் திகதி லண்​டன் சென்ற இளை​ய​ராஜா,   அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்​கேற்​றி​னார்.

லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

என்னை இசைக்கடவுள் என்றெல்லாம் ரசிகர்கள் சொல்வதை கேட்கும்போது. 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களேப் பா' என்றுதான் எனக்குத் தோன்றும். நான் சாதாரண மனிதனைப் போலத்தான் வேலை செய்கிறேன். என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X