Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 26 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தனது மகளுக்கு ஆதரவாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதுதவிர தனியார் ஊடகங்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந் நிலையில், தன்னை மர்ம நபர் ஒருவர் தாக்கிவிட்டதாக வனிதா தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) பதிவிட்டுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ‘ரெட் கார்டு கொடுக்குறீங்களா’ என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாக வனிதா அப்பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அந்த மர்ம நபரின் கோரமான சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர் என்றும் வனிதா பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால், பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
11 Apr 2025