Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மே 28 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கௌதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி செய்தது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இராமநாதபுர மாவட்டம், முதுகுளத்தூர் அருகே, சுவாத்தான் பகுதியில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தை, நடிகை கௌதமிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் அழகப்பன் வாங்கி கொடுத்துள்ளார்.
இதில், ரூ.56.47 இலட்சம் மதிப்புள்ள நிலத்தை, மதிப்பை உயர்த்திக் காட்டி, போலியாக ஆவணம் தயாரித்து நடிகை கௌதமியிடம் ரூ.3.16 கோடிக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 6ஆம் திகதி விசாரணை நடைபெற்றது.
அப்போது நடிகை கௌதமி நேரில் ஆஜராகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கியுள்ளார்.
இது குறித்து பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, அவரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பா.ஜ.க. பிரமுகர் அழகப்பன் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .