Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் செய்து கொள்வதாக பிரபல நடிகையின் கணவர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக வெளிநாட்டு பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராக்கி சாவந்த். தமிழ் சினிமாவில் கம்பீரம், என் சகியே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன ராக்கி சாவந்த் கடந்த மே மாதம் அடில் துர்ரானி என்பவரை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்டார். தனது இரண்டாவது திருமண போட்டோக்களை சமீபத்தில் வெளியிட்டு தனக்கு திருமணமான தகவலை அறிவித்தார் ராக்கி சாவந்த்.
ராக்கி சாவந்த் திருமண போட்டோக்களை வெளியிட்டதில் இருந்தே ராக்கி சாவந்துக்கும் அடில் துர்ரானிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அடில் துர்ரானிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார் ராக்கி சாவந்த். மேலும் அடில் துர்ரானி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனது OTPயை பயன்படுத்தி பணத்தை திருடியதாகவும் பொலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அடில் துர்ரானியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அடில் துர்ரானி தன்னை நிர்வாணமாக படம் பிடித்து அதனை பணத்திற்காக விற்றுவிட்டார் என குற்றம்சாட்டினார் ராக்கி சாவந்த். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே அடில் துர்ரானி மீது ஈரானிய பெண் ஒருவர் பலாத்கார குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக மைசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், மைசூரில் ஒன்றாக இருந்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி அடில் பலமுறை தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐந்து மாதங்களுக்கு முன்பு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும், பல பெண்களுடன் தனக்கு இதுபோன்ற பல உறவுகள் இருப்பதாகவும் அடில் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது அந்தரங்கப் படங்களைக் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் ஈரானில் வசிக்கும் தனது பெற்றோருக்கு தன்னுடைய போட்டோக்களை அனுப்பி வைத்துவேன் என அடில் துர்ரானி மிரட்டியதாகவும், தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார் அந்த பெண்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
21 Apr 2025
21 Apr 2025