Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “தளபதி 67” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது காஷ்மீரில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திரைப்படத்தின் டைட்டில் அண்மையில் வெளியாகியுள்ளது.
திரைப்படத்தின் மாஸ் டைட்டில் அது குறித்த வீடியோவில் ’தளபதி 67’ படத்துக்கு ‘லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களைப் போன்று இந்த படத்தையும் லோகேஷ் போதை பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இது சர்வதேச அளவிலான போதை கடத்தலை பற்றிய படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் உருவாக உள்ள இந்தத் திரைப்படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025