Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2022 மார்ச் 07 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகையின் கணவர் திடீரென விபத்தை ஏற்படுத்திவிட்டு, இருந்து தலைமறைவாகி உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ்கரும் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இவர் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதால் அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் கணேஷ்கர் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. அப்போது அவரது காரில் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் சேரவே கணேஷ் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகவும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கணேஷ் மனைவி ஆர்த்தி, அவர் வீட்டிற்கு வரவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விடிய விடிய ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் அவரை தேடியுள்ளனர்.
ஆனால் கணேஷ்கர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருவதாகவும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கணேஷ்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago