2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தலிபான் நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை

Editorial   / 2025 மார்ச் 09 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆபாசப் பட நடிகையின் ஆப்கானிஸ்தான் பயணம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் தலிபான்கள் ஆளும் நாட்டில் ஆபாசப் பட நடிகை எடுத்துக் கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசப் பட நடிகை விட்னி ரைட் இவர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை ஆவார், தொடர்ச்சியாகச் சர்ச்சைகளை இவர், கிளப்பி வருகிறார்.  

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதும் ஆகாது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அப்படியிருக்கும் போது ஈரானுக்காகப் பேசி வருபவர் தான் இந்த விட்னி ரைட். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நட்டியை ஆவார். இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் இவர் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் ஈரான் நாட்டிற்கும் சென்று திரும்பியுள்ளார். ஈரானை பொறுத்தவரை அது கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றும் ஒரு நாடாகும். அங்கு ஆபாசப் படங்களைப் பார்ப்பதே தண்டனைக்குரிய குற்றம். ஆபாசப் படங்களில் நடிப்போருக்கு மரண தண்டனையே விதிக்கப்படும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விட்னி ரைட் சமீபத்தில் ஈரான் சென்று, அங்கு எடுத்த போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

 இந்தச் சர்ச்சை முடிவதற்குள் அவர் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

அதாவது ஈரானில் இருந்து நேரடியாக அவர் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இருக்கும் விட்னி ரைட் இது தொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அதில் ஒரு படத்தில் புர்கா அணிந்து, கையில் ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர் தாலிபான்களின் முழு பாதுகாப்பிலேயே பயணிப்பது இதன் மூலம் உறுதியாகிறது. அவரது இந்த போஸ்ட்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் தாலிபான் அரசு அங்கு வசிக்கும் பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆப்கான் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக 72 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இப்படி ஆப்கான் நாட்டுப் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் ஆபாசப் பட நடிகைக்கு அதே அரசு பாதுகாப்பு தந்து ஊரையும் சுற்றிக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி ஆர்வலரான வாஷ்மா டோகி இதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .