2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் இதுவரை தோல்வியை காணாத மூன்று முன்னணி நட்சத்திரங்கள் குறித்து சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது வேற யாருமில்லை. இயக்குனர்கள் வெற்றிமாறன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் தான்.

 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம்,  விசாரணை,  வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய ஐந்து படங்களும் தோல்வியை தழுவவில்லை.

அதே போல், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி,  மெர்சல் மற்றும் பிகில் ஆகிய நான்கு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

மேலும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம்,  கைதி, மாஸ்டர் மற்றும் சமீபத்தில் வந்த விக்ரம் என அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

இதனால், இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத மூன்று இயக்குனர்கள் இவர்கள் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .