2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை

தமிழுக்கு வந்த மீரா

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், மீரா ஜாஸ்மின் (வயது43). கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அவர், லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ‘ரன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மலையாளத்தில் 2003ல் வெளியான ‘பாடம் ஒண்ணு: ஒரு விலாபம்’ என்ற படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

திருமணத்துக்கு பிறகு திரையுலகை விட்டு விலகியிருந்த மீரா ஜாஸ்மின், திடீரென்று தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில்,   ஏப்ரல் 4ம் திகதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோருடன் இணைந்து அவர் நடித்துள்ளார். இதை ஒய்நாட் ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரித்து இயக்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .