Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2022 மார்ச் 16 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார்.
இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் 'முசாபிர்' பாடலை தயாரிக்கும் பணிகளில் இறங்கினார் ஐஸ்வர்யா.
இந்த பாடலின் புரோமோ வீடியோ கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள 'முசாபிர்' என்ற பாடல் பல மொழிகளில் தயாராகியுள்ளது.
விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷும் வாத்தி, நானே வருவேன் படப்பிடிப்புகளில் பிசியானார். கவலைகளை மறக்க அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
இந்நிலையில் 'மாறன்' படம் ஓடிடியில் கடந்த வாரம் வெளியான நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இதில் திடீர் திருப்பமாக தனுஷின் இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்துள்ளார். இந்த தகவலால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனுஷின் ட்வீட்டை, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக் செய்துள்ள ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
3 hours ago