2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தனுஷ் இயக்கிய திரைப்படம் ரிலீஸ் திகதியில் திடீர் மாற்றம்?

Editorial   / 2025 ஜனவரி 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பெப்ரவரி 7-ம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஏற்கனவே திட்டமிட்ட திகதிக்கு முன்பாகவே வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தேதியில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் முன்கூட்டியே வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 30-ம் திகதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .