2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் ஷோபிதா

Editorial   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னடத்தில் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த  நடிகை ஷோபிதா(வயது 30)தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபிதா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், நடிகை ஷோபிதா தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியவர் அதன் பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், ஹைதராபாத்தில் அவரது வீட்டில் நடிகை ஷோபிதா தன்னுயிரை ஞாயிற்றுக்கிழமை (01) மாய்த்துக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .