2024 செப்டெம்பர் 19, வியாழக்கிழமை

‘தி கோட்’க்கு “நோ” சொன்ன தோனி

Janu   / 2024 செப்டெம்பர் 09 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தி கோட்’ படத்தில் விஜய் - தோனி இருவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைக்க திட்டமிட்டு நடைபெறாமல் போயிருக்கிறது. ‘தி கோட்’ படத்தின் இறுதி காட்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் மேட்சில் நடைபெறுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்தக் காட்சிகளின் பின்னணியின் வரும் கிரிக்கெட் வர்ணனை முழுக்க பத்ரிநாத் செய்திருந்ததுடன் இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்திருந்தது படக்குழு. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

படத்தில் வரும் ஐபிஎல் மேட்சில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் காட்சிகள் இடம்பெறும். இதில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.

தோனி களமிறங்கும் முன் விஜய் அவரை சந்தித்து இறுதிப் போட்டிக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற காட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தோனி ஏற்கனவே திகதிகள் கொடுத்துவிட்டதால் நடிக்க இயலாமல் போயிருக்கிறது.

‘தி கோட்’ படப்பிடிப்புக்கு இடையே விஜய்யும் “தோனியிடம் இருந்து பதில் வந்துவிட்டதா?” என்று இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். இறுதியில் தோனியிடம் திகதிகள் கிடைக்காத காரணத்தினால் காட்சியமைப்பில் சிறு மாற்றம் செய்து உருவாக்கி இருக்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .