Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 14 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் விக்ரம் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான 'ஷைத்தான்' திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்த நிலையில், அதிரடியாக 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இந்த ஆண்டு கத்ரீனா கைஃப், விஜய்சேதுபதி நடித்து வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ், ரோபோட்டோகா க்ரித்தி சனோன் நடித்த 'Teri Baaton Mein Aisa Uljha Jiya' உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. S
ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபைட்டர் திரைப்படமும் கூட பெரிய வசூலை ஈட்டவில்லை.
இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பின் ஜோதிகா பொலிவுட்டில் நடித்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தந்துள்ளது.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஜோதிகா முதன் முதலில் அறிமுகமானதே இந்தி படத்தில் தான். Doli Saja Ke Rakhna எனும் படத்தில் நடித்த அவர், அதன் பின்னர் தமிழில் அஜித்தின் வாலி படத்தில் நடித்த நிலையில், தமிழ் சினிமாவில் மிக முக்கிய நாயகியாக மாறினார்.
இப்போது, மீண்டும் மும்பைக்கு சென்றுள்ள ஜோதிகா 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஷைத்தான் படத்தின் மூலம் பொலிவுட்டில் திரும்ப நடித்துள்ளார்.
ஜோதிகாவின் பெற்றோர்கள், அக்கா நக்மா உள்ளிட்டோர் மும்பையில் வசித்து வரும் நிலையில், மும்பையிலேயே தனியாக பல கோடிகளுக்கு வீடு ஒன்றை வாங்கிக் கொண்டு தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். அதே சமயம் இந்தி படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்.
விக்ரம் பால் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ஷைத்தான் திரைப்படம் பிளாக் மேஜிக்கை வைத்து உருவாக்கப்பட்ட பேய் படமாக வெளியான நிலையில், இரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக சென்று அந்த படத்தை பார்த்து வருகின்றனர்.
அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான ஷைத்தான் திரைப்படம் முதல் நாளில் 15 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
ஷைத்தான் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், 25 ஆண்டுகள் கழித்தும் ஜோதிகா பொலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ள படத்துக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளதே என சூர்யா தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மார்ச் 8ஆம் திகதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான இத்திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய் தான். ஒரே வாரத்தில் ஷைத்தான் திரைப்படம் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டி படக்குழுவினரை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
பொலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இலாபகரமான படமாக ஷைத்தான் தான் மாறியிருக்கிறது. 200 முதல் 300 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago