2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன்

Freelancer   / 2024 ஜூலை 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரரைப் போற்று வெற்றிக்குப் பிறகு சூர்யாவும் சுதா கொங்கராவும் மீண்டும் ஒரு படத்திற்கு கைகோர்த்தனர். இப்படம் சூர்யாவின் 43வது படமாக உருவாகும் எனத் தெரிவித்த படக்குழு, கடந்த ஆண்டு அக்டோபரில் படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டது.

அதில் படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம்பெற்றது. மேலும் ஒரு போராட்டக் களத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடப்பதாகவும் அங்கு அடிதடி, கண்ணாடி போத்தல் உள்ளிட்டவை வீசப்பட்டு அந்த இடமே ஒரு போர்க்களமாக காட்சியளிப்பது போல் அந்த வீடியோ அமைந்திருந்தது.

2டி நிறுவனம் தயாரிக்கவிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பொலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்தது.

இந்த நிலையில் இப்படத்தில் சூர்யா தற்போது விலகியுள்ளதாகவும், சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு 2டி நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31ஆம் திகதி வெளியாகவுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X