2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சூர்யா படக் கதை மீது பெரும் நம்பிக்கை

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூர்யா படக் கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாக ‘தண்டேல்’ இயக்குநர் சந்து மொண்டேட்டி தெரிவித்துள்ளார்.

‘தண்டேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குநர் சந்து ஆகியோர் பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி வருகிறார்கள்

தற்போது சந்து மொண்டேட்டி அளித்துள்ள பேட்டியில், “சூர்யா சாருடைய படத்தின் கதை மிகவும் பெரியது. இப்போதும் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை மட்டுமே இப்போதைக்கு கூற முடியும்.

 

அக்கதையின் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. சூர்யா சார் மாதிரி ஒரு நடிகரால் மட்டுமே அக்கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும்.” என்று தெரிவித்துள்ளார்

சூர்யா - சந்து மொண்டேட்டி கூட்டணி படத்தினை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் எப்போது தொடங்கும் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே முடிவாகாமல் உள்ளது. இப்போதைக்கு ஆர்.ஜே.பாலாஜி படம் முடிவடைந்தவுடன், இடையில் ஒரு படம் முடித்துவிட்டே ‘வாடிவாசல்’ படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X