2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சுஷாந்த்சிங் முன்னாள் காதலிக்கு திருமணம்

J.A. George   / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவருடைய முன்னாள் காதலி, வரும் டிசெம்பர் மாதம் திருமணம்  செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

சுஷாந்த்சிங் ராஜ்புத் மற்றும் நடிகை அங்கிதா லோஹண்டே ஆகிய இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டுகளில் டேட்டிங் செய்து 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்2016ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் விக்கி ஜெயின் என்பவரை காதலித்து வந்த அங்கிதா, அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

டிசெம்பர் 12, 13, 14 திகதிகளில் ஒரு நாளில் இந்த திருமணம் நடைபெறும் என்றும்  திருமண திகதி முடிவு செய்யப்பட்டு உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும் அங்கீதா தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .