Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூலை 27 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓடிடி-யில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக இப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக அமையாமல் , அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்திருந்தது.
இந்த படத்தின் கதை 1970-களில் வடசென்னை பகுதியில் நடத்தப்பட்ட குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் அக்காலத்தில் காணப்பட்ட முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் ஆட்சிமுறை குறித்தும் ஆங்காங்கே இணைத்திருந்தனர்.
இதனால் இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் நாசர் பா.ரஞ்சித்தை பாராட்டி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன். உன் கையைப் பிடித்து ஒரு நூறு முத்தங்கள் கொடுத்து, 'நன்றி' ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எம் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
34 minute ago
3 hours ago