Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
J.A. George / 2022 ஜூன் 07 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த டீசரில் ஷாருக்கான் முகம் முழுவதும் பேண்டேஜ் சுற்றியபடி காட்சியளிக்கிறார்.
அதை பார்த்து, இது கடந்த 1990ம் ஆண்டு வெளியான டார்க் மேன் என்ற ஹொலிவுட் திரைப்படத்தின் தோற்றத்தை போன்று இருக்கிறது. அதனால் வழக்கம் போல் இந்தத் திரைப்படத்திலும் அட்லீ கொப்பி அடித்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அட்லீ இயக்கிய தெறி, மெர்சல் திரைப்படங்களில் நடித்த சமந்தா இந்த ஜவான் டீசர் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ஜவான் டீசர் பயங்கரமாக உள்ளது. அட்லீயை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது சமந்தாவின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக முதலில் அட்லீ தேர்வு செய்தது சமந்தாவைதான். ஆனால் அவர் வேறு சில தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகியிருந்ததால் அடுத்த தெரிவாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் திரைப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 2ஆம் திகதி திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .