2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை

“சினிமாவில் ஆணாதிக்கம்”

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் ‘36 வயதினிலேபடத்தின் மூலம் ரீ-என்ட்ரியான ஜோதிகா, சினிமாவில் நான் நிறைய விஷயங்களுக்குநோஎன்று சொல்லியிருக்கின்றேன். நான் நடிக்க ஆரம்பித்து 10 வருடங்களுக்கு பின்பு, அனைத்து தென்னிந்திய நடிகர்களுடனும் இணைந்து நடித்த பின்பு, எனது 28 வயதுக்கு பின்பு, சில படங்களுக்குத் தான் .கே சொல்லி நடித்தேன். அது மிகவும் கவனமான ஒரு முடிவு.

தென்னிந்திய படவுலகில் இருந்து நான் வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலைப்படுத்திய படங்கள்தான் அதிகமாக வெளியாகும். இப்போது இங்கு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது போல், பாலிவுட்டிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காகத்தான் அதிகமான கதைகள் எழுதப்படுகின்றன. அதில் பெண்கள் கதாபாத்திரம் முழுமையானதாகவே இருக்காது. பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும் பயன்படுத்தப்பட்டு இருப்பார்கள். அது இப்போதும் இருக்கிறது. ஆனால், நான் சினிமாவில் மாற்றுப்பாதையை தேடினேன். அதுபோன்ற படங்களும் எனக்கு கிடைத்தன. நான் நடித்தேன். ஆனால், நிறைய படங்களுக்குநோசொல்லியிருக்கிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .